கிரிக்கெட் பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..
கிரிக்கெட் பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..
பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டி யில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. நேற்று தனது இரண்டாவது போட்டி யில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 276/6 ரன் எடுத்தது . 49.2 ஓவரில் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தென் ஆப்ரிக்கா தோற்றது.ஸ்னே ராணா 5 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகி ஆனார்.
சுதிர்மன் கோப்பை பாட்மின்டன்
சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் சீனாவில், இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் இந்தியா 1-4 என டென் மார்க்கிடம் தோற்றது. இரண்டாவது போட்டி யில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இந்திய அணி, வலிமை யான இந்தோனேஷி யாவை சந்தித்தது. முதலில் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோஜோடி, 10-21, 21-18, 21-19 சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவின் டாப்ட், மேக்லண்ட் ஜோடியை சாய்த்தது. இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி ஜோடி 10-21, 9-21 என இந்தோனேஷி யாவின் மாயாசரி, ரதாந்தி ஜோடியிடம் தோற்று , 1-4 என்ற கணக்கில்காலிறுதி வாய்ப்பை இழந்தது
0
Leave a Reply